கூடாரங்கள் இல்லை: மீன் வெட்டுனர்கள் யாழ் மாநகரசபை மீது விசனம்!!

நல்லூர் கல்வியங்காடு செங்குந்தா பொதுச்சந்தை மீன் வெட்டுனர்கள், யாழ். மாநகர சபையின் செயற்பாடுகள் குறித்து இன்று விசனம் தெரிவித்துள்ளனர்

மீன் வெட்டுனர்கள் மாநகர சபையின் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கையில்,

பருவமழை காலத்தில்  கூடாரம் இல்லாத காரணத்தால் பத்துக்கும் மேற்ப்பட்ட மீன் வெட்டுனர்கள் மழையில் நனைந்து தொழிலில் ஈடுபடுவதாகவும்  இது குறித்து கடந்த வருடத்திலிருந்து மாநகர சபை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.

இந்த வருடமும் பாதிப்படைக்கின்றோம், நிரந்தர தகர சீற் கூடாரத்தை உடனடியாக அமைத்து தர வேண்டும் அல்லது மாற்று இடத்தை தரவேண்டும். அத்தோடு மீன் வியாபாரிகளோடு மீன் வெட்டுத்தல் பிரச்சனையும் உள்ளது இதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மாநகர சபைக்கு இட வரி செலுத்தி வருகின்றோம்.

குறித்த விடயங்களை யாழ். மாநகர அதிகாரிகள் கவனத்தில் எடுத்து சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்துரையாடி தீர்வினைப்பெற்று தரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

செய்தி: பு.கஜிந்தன்


No comments