யாழ் - கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களிடையே நடைபெற்ற சிநேகபூர்வ சந்திப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் இடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடல் நேற்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன் பொழுது இரு ஒன்றியங்களுக்குமிடையிலான எதிர்கால திட்டமிடல்கள், தமிழ் தேசிய பரப்பினுள் மாணவர் ஒன்றியங்களாக ஆற்ற வேண்டிய செயற்திட்டங்கள் போன்ற ஆக்கபூர்வமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

செய்தி: பு.கஜிந்தன்


No comments