பளை - முகாமாலை கிராமப் பகுதியில் துப்பாக்கி மற்றும் வாள் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரைக் காவல்துறையினர் நேற்றுப் புதன்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

பளை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட  பகுதியில் சந்தேகநபர் வீட்டில் வாள் மற்றும் இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பளை காவல்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டை சோதனையிட்ட காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்துள்ளதோடு, வாள் மற்றும் துப்பாக்கி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.

கைதான சந்தேகநபர் கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்த உள்ளதாக பளை காவல்துறையினர் தெரிவித்தனர்.

செய்தி: பு.கஜிந்தன்

No comments