கார்த்திகை:மரநடுகை!!



கார்த்திகை தினத்தை முன்னிட்டு வடமாகாணசபையால் முன்னெடுக்கப்படும் மரநடுகை  திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

வடக்கு மாகாண மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடுகை விழா இன்று 17.11.2022 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கல்லுண்டாய்பகுதியில் நடைபெற்றது.

வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளலர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உதவிச் செயலாளர் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கணக்காளர் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், பிரதி மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத்  திணைக்கள பணிப்பாளர், நீர்ப்பாசனப் பொறியியலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த மரம் நடுகை விழாவினை விவசாய திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் மற்றும் மீன்பிடி பிரிவு ஆகிய இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. மர நடுகை விழாவிற்கான ஒத்துழைப்பினை மரம் நடுகை இடங்களின் உள்ளூராட்சி சபைகள் வழங்கியிருக்கின்றன.

குறித்த மரம் நடுகை நிகழ்வானது வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும்  நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



வடக்கு மாகாண மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல் அலகினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடுகை விழாவின் கிளிநொச்சி மாவட்ட நிகழ்வு இன்று 17.11.2022 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் கிளிநெச்சி மாவட்டத்தில் இரணைமடு இடது கரை பகுதியில் நடைபெற்றது.

கிளிநொச்சிப் பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி க.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் அ.சிவ பாலசுந்தரன், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், திரு எஸ்.செல்வராஜா, மேலதிக அரசாங்க அதிபர் ஶ்ரீமோகனன் மற்றும் அனைத்து திணைக்கள மாவட்ட தலைவர்கள், கமக்கார அமைப்பு பிரதிநிதிகள், பண்ணையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த மரம் நடுகை விழாவினை விவசாய திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் மற்றும் மீன்பிடி பிரிவு ஆகிய இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. மர நடுகை விழாவிற்கான ஒத்துழைப்பினை மரம் நடுகை இடங்களின் உள்ளூராட்சி சபைகள் வழங்கியிருக்கின்றன.

குறித்த மரம் நடுகை நிகழ்வானது வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும்  நடைபெற்றிருந்ததோடு ஏறக்குற்றைய 1500 மரங்கள் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments