செம்மணியில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு!!


யாழ். செம்மணி குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் இன்று மதியம் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த குளத்தினை அண்மித்த பகுதியில் வசித்துவரும் இளைஞன் ஒருவர் நேற்றையதினம் (16) தூண்டிலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவேளை இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் குளத்தில் தேடுதல் நடாத்தி வந்தநிலையில் இன்று மதியம் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைகளாக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கோப்பாய் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி: பு.கஜிந்தன்

No comments