செம்மணியில் இளைஞனை காணோம்!யாழ்ப்பாணம் செம்மணிக் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இக் குளத்தை அண்மித்த பகுதியில் வசித்து வரும் 21 வயதுடைய குறித்த இளைஞர் நேற்று மாலை தூண்டில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளார். 

இவ்வாறு மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் குளத்தில் நீராடியுள்ளார். இதன் போது அவர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இதனையடுத்து அப் பகுதி மக்கள் உட்பட பலரும் இணைந்து இரவிரவாக நீண்ட நேரம் தேடுதல் நடத்தினர். எனினும் இதுவரையில் இளைஞரைக் காணவில்லை.

 இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments