கடற்படை தாக்கி இந்திய மீனவர் கண்ணை இழந்துள்ளார்!இலங்கை கடற்படையினரின் தாக்குதலிற்கு உள்ளான இந்திய மீனவர் கண்ணை இழந்துள்ளார்.

இராமேஸ்வரத்தில் இருந்து 14ஆம் மீன்பிடிக்க வந்த 530 ஆம் இலக்க படகில் வந்த மீனவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படையினர் நீண்ட நேரத்தின் பின்பு தாக்குதல் மேற்கொண்ட பின்பு மீனவர்களை விடுவித்தமையினால் 15 ஆம் திகதி காலை கரை திரும்பிய மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட மீனவர்களில் ஒருவரின் ஓர் கண்ணில் பெரிய பாதிப்பு காணப்பட்டதனால் வேறு மார்க்கம் இன்றி அந்த அகற்றப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


இதன் காரணமாக இராமேஸ்வரம் மீனவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

No comments