மாணவனின் நெற்றியில் அறைந்த ஆசிரியர் - மாணவன் வைத்தியசாலையில் அனுமதி


யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 10 ஏ வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் குறித்த மாணவன் யாழ்.  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பாடசாலையில் இடம் பெற்றுள்ளது.

 சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த மாணவனை பலமுறை தாக்கிய ஆசிரியர் தடி முறிந்த நிலையில் தனது கையால் மாணவனின் நெற்றியில் அறைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.  இந்து கல்லூரியின் அதிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த சம்பவம் தொடர்பில் தான் அறியவில்லை எனவும் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதாகவும்  தெரிவித்தார்.

செய்தி: பு. கஜிந்தன்

No comments