அமைச்சரது ஆட்கள் மிரட்டுகின்றனர்?
இந்திய மீனவர்களது அத்துமீறல்கள் தொடர்பில் தகவல் வெளியிட்டால் கடற்றொழில் அமைச்சரது கட்சியான ஈபிடிபி கட்சியினர் கொலை மிரட்டல் விடுவதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இன்றைய தினம் வடமராட்சி கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்த இந்திய இழுவைப்படகு மோதி விபத்துக்குள்ளான உள்ளுர் படகிலிருந்த மீனவர் கடலில் வீழ்ந்து அதிஸ்டவசமாக உயிர்தப்பித்துள்ளார்.
வல்வெட்டித்துறை கடற்பரப்பில் கரையில் இருந்து 4 கடல் மைல் தூரத்தில் நூற்றுக் கணக்கான இத்திய இழுவைப் படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததாக உள்ளுர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் போதே வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி மீன்பிடி சங்கத்தைச் சேர்ந்த எஸ்.விஜயராஜா என்பருக்குச் சொந்தமான படகினை இந்திய இழுவைப்படகு மோதி உடைத்து நாசம் செய்துள்ளது.
கடந்த 2021 ம் ஆண்டும் இதே காலத்தில் தனது வலைகள் அறுக்கப்பட்டு நாசமாக்கப்பட்டதாக தெரிவித்துள்ள விஜயராஜா சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு பேட்டி வழங்கியதையடுத்து ஈபிடிபி கட்சியினரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment