இணையவில்லை:சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே!ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் தாம் இணையவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவில் சுயேச்சையாக செயற்பட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி நேற்று (14) ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்தார்.

தனக்கு மேலதிகமாக அனுர பிரியதர்சன யாப்பா, டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, விசேட வைத்திய நிபுணர் கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, பியங்கர ஜயரத்ன மற்றும் ஜயரத்ன ஹேரத் ஆகியோர் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, தான் வெளிநாட்டில் இருப்பதால் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

தான் எந்தவொரு கூட்டமைப்பிலும் இணைந்துகொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களான டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன மற்றும் ஜயரத்ன ஹேரத் ஆகியோர் தாங்களும் கூட்டணியில் இணையவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

No comments