கோட்டாவை கொல்ல சிங்களவர்கள் முயற்சி?கோட்டபாயவை கொலை செய்ய சிங்கள போராட்டவாதிகள் முற்பட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்தபோது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி நாட்டில் பல்வேறு இடங்களில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அத்தோடு, கோட்டை ஜனாதிபதி மாளிகை, மற்றும் அலரி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்து அவற்றை ஆக்கிரமித்திருந்தனர்.

இதன்போதே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை கொல்லும் திட்டம் தீட்டப்பட்டதாக உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


No comments