சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப மனிதாபிமான உதவி!



 கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் வியட்நாமில் Tau மாகாணத்தில் உள்ள தற்காலிக தங்குமிடமொன்றில் தங்கவைக்கப்பட்டு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளதாக வியட்நாம் வெளிவிவகார அமைச்சு செய்தித் தொடர்பாளர் லீ தி து ஹாங் கூறியுள்ளார்.  

இவர்களுக்கு சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப மனிதாபிமான உதவி நடவடிக்கைகளை செயல்படுத்துகிறது.   ​இந்த மக்கள் சாதாரண உடல்நிலையில் உள்ளனர் மற்றும் அவர்களுக்கான உதவிகள் உள்ளூர் அதிகாரிகளால்  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் பல சர்வதேச நிறுவனங்களுடன் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. Tau மாகாணம் வியட்நாமிய சட்டம் மற்றும் வெளிவிவகார அமைச்சு மனிதாபிமானம், பொறுப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்புடைய தரப்பினருடன் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளை செயல்படுத்துகிறது என்றார்.

No comments