"பவர்" போன அமைச்சரும் தியேட்டரும்!



மின் கட்டணம் செலுத்தப்படாமையினால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில்,  யாழ்ப்பாணம் ஸ்ரீதர் தியேட்டர் கட்டிடத்தில் இயங்கி வருகின்ற ஈ.பி.டி.பி. தலைமை அலுவலகம் இருளில் மூழ்கி இருக்கின்றது.

இதுதொடர்பாக தகவல்களை வெளியிட்ட பெயர் குறிப்பிட விரும்பாத இலங்கை மின்சார சபை ஊழியர் ஒருவர்,

2014 ஆண்டுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

2022ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் திகதி அன்று தயாரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின் பிரகாரம், டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்திற்கான முழு மின்சார கட்டணமாக 97 லட்சத்து 16 ஆயிரத்து 120 ரூபா 40 சதம் செலுத்த வேண்டிய தொகையாக காணப்படுகின்றது.

அதே போல டக்ளஸ் தேவானந்தாவுக்கு சொந்தமாக இருந்த கொழும்பு-5, பார்க் வீதியிலும் கொழும்பு-4, லேயாஸ் வீதியிலும் இருந்த வீடுகளுக்கும் தண்ணீர் கட்டணமும் செலுத்தவில்லை. தற்போது வீடுகள் விற்கப்பட்டு விட்டது

இந்த வீடுகள் இரண்டுக்குமான தண்ணீர் கட்டணமாக சில ஆண்டுகளுக்கு முன் வரை 1 கோடியே 19 இலட்சத்து 88 ஆயிரத்து 267 ரூபா 95 சதம் செலுத்தப்பட வேண்டியிருந்தது.

குறிப்பாக லேயாஸ் வீதி வீட்டின் தண்ணீர் கட்டணம் மட்டும் தண்ணீர் கட்டண கணக்கிற்கு அமைய 22 இலட்சத்து 38 ஆயிரத்து 694 ரூபா 76 சதமாக இருந்தது.

மின் இணைப்பின் தியட்டரிற்கான கணக்கிலக்கமான 1698170408 இன் மீதி 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் 85 லட்சத்து 50 ஆயிரத்து 982 ரூபா 75 சதம் காணப்பட்டதாகவும் 2014 ஆம ஆண்டிற்கு பின்பு தற்போது 2022 ஆம் ஆண்டுவரையில் மாத சிட்டைக்கான கொடுப்பனவு மட்டுமே செலுத்தப்படும் நிலையில் நிலுவைப் பணம் செலுத்தவில்லை என இ.மி.சபை அறிவித்துள்ளது.

இவ்வாறு செலுத்தாத 85 லட்சத்து 50 ஆயிரத்து 982 ரூபா 75 சத்ததிற்கும் தற்போது 8 ஆண்டுகால வட்டிப் பணத்துடன் ஒரு கோடி ரூபாவினை தாண்டியுள்ளது


No comments