இனி ஜேவிபியுடன்-முற்போக்கு சோசலிசக் கட்சிஎதிர்காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியுடன் தாம் இணைந்து செயற்படத் தயார் என முற்போக்கு சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.

கேகாலை நகர மண்டபத்தில் நேற்று (14) நடைபெற்ற கட்சியின் கார்த்திகை வீரர்கள் நினைவு கூரல் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அதன் தலைவர் குமார் குணரட்னம் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் 33ஆவது கார்த்திகை வீரர்கள் நினைவேந்தல் நேற்று கொழும்பு விகாரமஹாதேவி திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, உண்மையான பொதுமக்களுக்கு நலன்பயக்கக்கூடிய முகாமுக்கு எதிராக போலி முகாம்களை உருவாக்கும் சதிச் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக குற்றம்சுமத்தினார்.

No comments