ஒன்றாக இருக்க ரணிலும் அழைக்கிறார்





சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி வடக்கின் பிரச்சினையை தீர்க்க தயாராக இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

. வடக்கு, தென்னிலங்கை என மக்கள் நீண்டகாலமாக பல்வேறு காரணங்களுக்காக அவதிப்பட்டு வருவதாகத் தெரிவித்த  ரணில் அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வழங்குவதற்கு அவசரமாகச் செயற்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

“பயங்கரவாதத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்க வேண்டும். அத்துடன், இலங்கை சமூகத்தில் முஸ்லிம்களுக்கு அவர்களின் உரிமைகள் தொடர்பில் கேள்விகள் உள்ளன. மலையக மக்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இப்பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்ற சமூக கருத்து நிலவுகிறது. எனவே இந்த பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்க இதுவே சிறந்த நேரம். இந்தப் பிரச்சினைகள் முறையாகத் தீர்க்கப்பட வேண்டும். இது குறித்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாட எதிர்பார்க்கின்றேன். நாட்டைப் பிளவுபடுத்தாமல் பிரச்சினைகளைத் தீர்ப்பேன் என்று நம்புகிறேன். முதலில் மக்களின் சந்தேகங்களை நீக்க வேண்டும். நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் அந்த சந்தேகம் நீங்கும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கிடைக்கும். 83ல் இருந்து வெகுதூரம் வந்துவிட்டோம். மேலும் 2009ல் இருந்து வெகுதூரம் வந்துவிட்டது. தேசிய கீதத்தின் ஒரு வரி நினைவுக்கு வந்தது. அதாவது ஒரு தாயின் பிள்ளைகளாக வாழ்வது. 75வது சுதந்திர தினத்திலும் நாம் ஒரு தாயின் குழந்தைகளாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

No comments