அதானிக்கு விற்பவை:ரணில் பார்வையிட்டார்இலங்கையின் வடபுலத்தை இந்திய அதானி குழுமத்திற்கு தாரை வார்ப்பதில் மும்முரமாக ரணில் ஈடுபடத்தொடங்கியுள்ளார்.

அவ்வகையிர் மீள்புதிப்பிக்கத்தக்க சக்தியை விருத்தி செய்யும் வகையில் மன்னாரில் அமைக்கப்பட்ட காற்றலையினை பார்வையிட்ட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, குறித்த திட்டத்தினால் நாட்டிற்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் சில தரப்பினரால் முன்வைக்கப்படுகின்ற பாதகமான விமர்சனங்கள் தொடர்பான உண்மை தன்மைகளையும் கேட்டறிந்ததாக சொல்லப்படுகின்றது. இதன்போது, பூநகரிப் பொருத்தமான இடங்களை தெரிவு செய்து இவ்வாறான திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்னெடுக்கப்பட்ட திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும் பங்காளி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதிக்கு எடுத்துரைத்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக பூகரியில் கடற்கரை பெருமளவில் கடலட்டை பண்ணைகளிற்கு விற்ற குற்றச்சாட்டுக்களை டக்ளஸ் தேவானந்தா எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments