மாவீரர்களை களங்கப்படுத்தாதீர்: பசீர் காக்கா!தமிழீழ மாவீரர் பணிமனையினால் வெளியிடப்பட்ட மாவீரர் பட்டியலில் உள்ளோரையும் 2009 மே 15க்கு பின்னர் வெளியுலகத்திற்கு தகவல் தெரிவிக்க

முடியாத களச் சூழலில் வீரச் சாவடைந்த புலிகள் இயக்கப் போராளிகளையும் தவிர வேறு எவரையும் இடைச்செருகலாக இணைத்து மாவீரர்களில் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என மூத்த போராளியும் மாவீரர் அறிவிழியின் தந்தையுமான முத்துக்குமார் மனோகர் (பசீர் காக்கா) கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இன்று யாழ்.ஊடக அமையத்தின ஊடாக அவர் விடுத்திருக்கின்ற ஊடக அறிக்கையில் அவ்வாறு வேறு யாரையாவது நினைவு கூர வேண்டும் என வலியுறுத்தும் தரப்புகள் தங்கள் கட்சியின் நிறுவனர்களின் நினைவு நாளிலோ ,பிறந்த நாளிலோ தனியாக நினைவு கூருவதற்குரிய உரிமை பற்றி எவரும் ஆடசேபனை தெரிவிக்க மாட்டார்கள் எனவும் கருதுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உயிரிழந்த அனைவரையும் இணைத்து நினைவேந்தல் முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் பசீர் காக்காவின் ஊடக அறிக்கையில்:-


No comments