டிரம்பின் ட்விட்டர் கணக்கின் தடையை நீக்கினார் எலான் மஸ்க


அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டர் கணக்கு 22 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

வன்முறையைத் தூண்டியதாக டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடக்கப்பட்டது.

வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்த தடையை நீக்குவதாக எலான் மஸ்க் அறிவித்த சில நிமிடங்களிலேயே டிரம்ப் ட்விட்டர் கணக்கு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

முன்னதாக எலான் மஸ்க், மைக்ரோ பிளாக்கிங் இணையதளத்தில், டிரம்பின் கணக்கை மீட்டெடுப்பது குறித்து நடத்திய கருத்துக்கணிப்பில், 51.8 சதவீதம் பேர் டிரம்ப்பிற்கு ஆதரவாக வாக்களித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments