ஒஸ்மானியா கல்லூரிக்கு பொலிஸ் பாதுகாப்பு!


ஒஸ்மானியா கல்லூரி வளாகத்திற்குள் போதைப் பொருள் பாவித்த மாணவனை தண்டித்த ஆசிரியரை கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட சம்பவத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது சந்தேக நபர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்,

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் தற்பொழுது தலைமறைவாகியுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளார்கள் எனவே நான் பாதுகாப்பு தரப்பினரிடம் பொலிசாரிடமும்சம்பந்தப்பட்டவரை உடனடியாக கைது செய்ய பணித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்குள் புகுந்து ஆசிரியர் ஒருவர் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து ஒஸ்மானியா கல்லூரிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments