மாலைத்தீவில் இலங்கை தொழிலாளர்களும் வசிக்கும் கட்டிடத்தில் தீ விபத்து: 10 பேர் பலி


மாலைதீவு தலைநகர் மாலேயில் இலங்கை, இந்திய மற்றும் பங்களாதேஷ் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் இன்று வியாழக்கிழமை (10) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

இன்று நள்ளிரவு 12:30 மணியளவில் மாவியோ மசூதிக்கு அருகில் உள்ள எம். நிருபேஹி பகுதியில் உள்ள கேரேஜில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.

கேரேஜ் தரை தளத்தில் அமைந்துள்ளது. முதல் மாடியில் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான குடியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் ஒன்பது இந்தியர்களும் ஒரு வங்கதேச பிரஜையும் உயிரிழந்ததாக உறுதி செய்துள்ளார்.

மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையும், வளாகத்தில் 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

மாலத்தீவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் சோகமான தீ விபத்து குறித்து வருத்தம் தெரிவித்தது.

உடல்கள் கடுமையாக எரிக்கப்பட்டிருப்பதால், உடல்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது என்றும் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன என்று அங்கிருந்து வரும் செய்திகள் மேலும் தொிவிக்கின்றன.

No comments