யாழ். இந்திய துணைத் தூதரகம் மீது போத்தல்களால் தாக்குதல்!!


யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றுப் புதன்கிழமை இனம் தொியாத நபர்கள் போத்தல்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று (10) காலை யாழ். இந்திய துணை தூதுவரினால் யாழ்ப்பாண காவல்துறையினருக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண காவல்துறையினர் மற்றும் தடயவியல் காவல்துறையினர் விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


No comments