இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது!


அவுஸ்ரேலியா அடிலெய்டில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இருபதுக்கு இருபது (T20) உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் 10 விக்கட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து முன்னேறியது.

முன்னதாக, ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்கள் விளாச, இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 168-6 ரன்களை குவித்தது. விராட் கோலி 50 ரன்களை எடுத்தார். இது  டி20 உலகக் கோப்பை போட்டியின் அவர் அடித்த நான்காவது அரை சதமாகும்.

இங்கிலாந்து அணி 16 ஓவரில் எந்தவொரு விக்கட் இழப்பின்றி 170 ரன்களை எடுத்து இலக்கை எட்டியது.

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை நாளை மறுதினம் சனிக்கிழமை சந்திக்கிறது.


No comments