புகலிடத் தலைமுறையின் தாயகப் பற்று ! ஆதரவற்றோரை அரவணைக்கின்ற இளையோரின் நாட்டிய நிகழ்வு!


இலங்கைத் தேசத்தின் இடைவிடாத இனவாதப்போர் ஈழத் தமிழர்களில் எண்ணற்றவர்களைக் கொன்றும், அகதியாக்கியும், எண்ணற்ற மாற்றுத் திறனாளிகளை உருவாக்கியும் அவர்களை வறுமைப் பிடிக்குள் சிதைத்தெறிந்துள்ளது.

இவ்வாறு ஆதரவற்றுத் தவிப்போரின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை,கல்வி, சுகாதாரம், நம்பகமான பாதுகாப்பு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள்கூட பெருமளவில் அங்கு கேள்விக் குறியாகி நிற்கின்றது. இன்னிலையில் பல புலம் பெயர் நிறுவனங்களும் கருணையுள்ளம் கொண்ட தனிமனிதர்களும் அவர்களுக்கு உதவி வழங்கி வாழ வைத்துக் கொண்டிருப்பது போற்றுதலுக்குரியது.

இந்த வகையில் கிளிநொச்சியிலுள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் பல நூற்றுக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகள் இருக்கின்றார்கள். அவர்களில் பலர் மாற்றுத்திறனாளிகள். அவர்களின் வாழ்விலும் விடியல் வந்திட வேண்டும். வாழ்வின் அனைத்திற்குமாக போராடிக் கொண்டிருக்கும் அவர்களிற்கு உதவுதல் மனிதாபிமானக் கடமையென எண்ணி ரொறன்ரோவின் புதிய தலைமுறை தாங்கள் கற்ற தங்களின் கலைப் படைப்புகளின் மூலம் தாயக உறவுகளுக்கு உதவிட முனைந்திருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகின்றது. எதிர்வரும் 21 ந்திகதி மாலை 6 மணிக்கு Fairview library theatre மண்டபத்தில் அவர்களின் அவ்வரிய நாட்டியக் கலாநிகழ்ச்சி இடம் பெறுகின்றது. அனைவரும் வருக ! ஆதரவு தருக!

No comments