பிரபஞ்சத்தின் உன்னதமான காட்சி ஒன்றை படம் பிடித்துள்ளது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி


பிரபஞ்சத்தின் உன்னதமான காட்சி ஒன்றை படம் பிடித்துள்ளது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.

படைப்புத் தூண்கள் என்று அழைக்கப்படுபவை, பூமியிலிருந்து 6,500 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள செர்பன்ஸ் விண்மீன் தொகுப்பில் உள்ள ஹைட்ரஜன் வாயு மற்றும் தூசியின் குளிர்ந்த, அடர்த்தியான மேகங்களே இவையாகும். 

இதுபோன்ற படங்களை 1995 மற்றும் 2014 ஆண்டிலும் ஹப்பிள் ஆய்வகம் படங்களை எடுத்திருந்தது.

ஜேம்ஸ் வெப் என்பது அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் கனேடிய விண்வெளி நிறுவனங்களின் கூட்டுத் திட்டமாகும். இது கடந்த ஆண்டு டிசம்பரில் ஏவப்பட்டது மற்றும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் வாரிசாக கருதப்படுகிறது.

No comments