வடமராட்சி புலோலியில் கிணற்றில் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி!


உபாய கதிர்காமம், புலோலி பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் விழுந்து 24 வயதுடைய இரு வாலிபர்கள் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் நேற்றையதினம் (24) இடம்பெற்றுள்ளது.

குறித்த இருவரது சடலமும்  பருத்தித்துறை மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் கிணற்றுக்குள் விழுந்ததுடன் அவரை காப்பாற்ற மற்றொரு இளைஞர் கிணற்றுக்குள் குதித்த நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தில்பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் (வயது- 24), மற்றும் மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் லம்போசிகன் (வயது 24) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.(க)

No comments