பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அமைச்சர்கள் சிறையில் இருக்க வேண்டியவர்கள் - சிறீதரன்


பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தற்பொழுது அமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் சிறையில் இருக்க  வேண்டியவர்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமைக்கு, கடந்த காலங்களில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் தான். தற்பொழுது மக்கள் இவ்வாறு கஷ்டத்திலும் துன்பத்திலும் வாழ்ந்து வருகின்றனர்.

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு தொடர்பில் விசாரணை செய்யப்பட வேண்டும். பொருளாதார வீழ்ச்சிக்கான காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இந்த பொருளாதார நெருக்கடியை உருவாக்கிய ராஜபக்ச குடும்பத்தினர்கள் தொடர்ந்தும் காப்பாற்றப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள்.

சீனி மோசடி, உர இறக்குமதியில் மோசடி இவ்வாறு மோசடியில் ஈடுபட்டவர்கள் தற்பொழுது அமைச்சர்களாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக விசாரணை செய்யப்பட்டு இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

No comments