பிரித்தானியாவில் நடைபெற்ற லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகள் வணக்கநிகழ்வு

இலங்கை – இந்திய கூட்டுச்சதியால் பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு

வேங்கைகளின் 35 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

தமிழீழக் கடற்பரப்பில் பயணித்தவேளை சிறிலங்கா கடற்படையால் கைதுசெய்யப்பட்டு பலாலி படைத்தளத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவர்களை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு சிறிலங்கா – இந்தியப் படைகள் மேற்கொண்டிருந்த கூட்டுச் சதியினை முறியடிக்க 05.10.1987 அன்று சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

யாழ். மாவட்ட தளபதி
லெப்.கேணல் குமரப்பா
(பாலசுந்தரம் இரத்தினபாலன் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)

திருமலை மாவட்ட தளபதி
லெப்.கேணல் புலேந்திரன்
(குணநாயகம் தருமராசா – பாலையூற்று, திருகோணமலை.)

மேஜர் அப்துல்லா
(கணபதிப்பிள்ளை நகுலகுமார் – சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.)

கப்டன் பழனி
(பாலசுப்பிரமணியம் யோகேந்திரராசா – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)

கப்டன் கரன்
(வைத்திலிங்கம் மனோகரன் – சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.)

கப்டன் மிரேஸ்
(தவராஜா மோகனராஜா – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)

கப்டன் நளன்
(கணபதிப்பிளளை குணேந்திரராஜா – பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.)

லெப்டினன்ட் அன்பழகன்
(தேசோமயானந்தம் உத்தமசிகாமணி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.)

லெப்டினன்ட் தவக்குமார்
(சோமசுந்தரம் பாக்கியராஜா – முள்ளியான், யாழ்ப்பாணம்.)

2ம் லெப்டினன்ட் ரெஜினோல்ட்
(கபிரியேல் பேனாட் மரியநாயகம் – முள்ளியான், யாழ்ப்பாணம்.)

2ம் லெப்டினன்ட் ஆனந்தகுமார்
(ஞானபிரகாசம் பிரான்சிஸ் அலோசியஸ் – மணற்காடு, யாழ்ப்பாணம்.)

இவர்களுடன் சயனைட் உட்கொண்ட நிலையில் மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டு பண்டுவம் அளிக்கப்பட்ட போது 06.10.1987 அன்று

கப்டன் ரகுவப்பா
(இராஜமாணிக்கம் ரகுமான் – வல்வெட்டிதுறை, யாழ்ப்பாணம்.)

ஆகியோரும் வீரசாவினைத் தழுவிக் கொண்டார்கள்.

இன்று பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் இலண்டன் சட்டன் பகுதியில் நினைவு கூரப்பட்டது .

நிகழ்வின் பொதுச்சுடரினை திருமதி சாமினி கண்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

தமிழீழத் தேசியக் கொடியினை      லெப்டினன் கேணல் புலேந்திரன் அவர்களின் மகன் திரு. சீலன் அவர்கள் ஏற்றிவைத்தார் . தொடர்ந்து ஈகைச்சுடரினை திருமதி சுஜி ஆனந்த்  ஏற்றி வைத்தார் .

தாயாக விடுதலை போரிலே வீரச்சாவை தழுவி கொண்ட மாவீரர்களையும் மக்களையும் நினைவில் நிறுத்தி அகவணக்கம் செலுத்தபட்டது .

தொடர்ந்து, திருவுருவப்படத்திற்கான மலர்மாலையை சுபாசினி மற்றும் றஜனி அவர்களும் அணிவித்தார்கள்.

தொடர்ந்து மக்கள் மலர்வணக்கம் மற்றும் சுடர் வணக்கம் செலுத்தினார்கள் .

இந்நிகழ்வில் எழுச்சி நடனங்கள், நினைவெழுச்சி உரைகளை தொடர்ந்து 2022 ல் எக்செல் ( Exel) மண்டபத்தில் நடைபெற இருக்கும் மாவீரர்நாள் பற்றிய விடயங்கள் மக்களுடன் பகிரப்பட்டு துண்டுப் பிரசுரங்களும் கையளிக்கபட்டது . நிறைவாகத் தமிழீழ தேசியக்கொடி கையேந்தலுடன், தமிழீழம் கிடைக்கும் வரை தொடந்து பயணிப்போம் என்கின்ற உறுதிமொழியோடு நிகழ்வானது நிறைவு பெற்றது .


No comments