பாரிஸில் ஏலத்திற்கு வருகிறது 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு!!


பிரான்சின் தலைநகர் பாரிசில் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புக்கூடு எதிர்வரும் 20ஆம் திகதி ஏலம் விடப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கொலோரேடோவில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் தற்போது பிரான்சின் பாரீசில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாரீசில் நடைபெற உள்ள ஏலத்தில் சுமார் 4 லட்சம் யூரோ வரை டைனோசர் எலும்புகள் ஏலம் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 


No comments