யாழ் ஆலயங்களில் தீபாவளி கொண்டாட்டம்!!

தீபவொளியின் தீபாவளிநாளினை கொண்டாடும் மக்கள் இன்று அதிகாலையில் இருந்து  ஆலய சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களிலும் தீபாவளிப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

இவ் வழிபாட்டினை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் சிறப்பான ஆராதனைகள் காலை 06.00 மணிக்கு இடம்பெற்றன. இந்த பூசை வழிபாட்டினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ செ.இரமணிதரக் குருக்கள் ஆராதனை வழிபாட்டினை நடாத்திவைத்தார்.

தமது உள்ளத்தில் உள்ள இருளை அகற்றி  தீபவொளி என்னும் திருவிளக்கேற்றி வழிபட்டு சென்றனர். (க)

No comments