பருத்தித்துறை - புலோலியில் 33 பவுண் நகை திருட்டு


பருத்தித்துறை புலோலி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 33 பவுண் தங்கநகைகள் நேற்றையதினம் (27) களவாடப்பட்டுள்ளன.

வீட்டில் உள்ளவர்கள் வேலை நிமித்தமாக வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தவேளை நகை களவாடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். (க)

No comments