யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் தேசிய கரம் போட்டிகள் ஆரம்பம்

33வது தேசிய கரம் போட்டிகள் இன்றையதினம் யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில்  ஆரம்பமாகியுள்ளன.

இதன்போது விருந்தினர்கள், மேற்கத்தேய இசை முழங்க அழைத்துவரப்பட்டு, தேசியக் கொடி, வடக்கு மாகாண கொடி மற்றும் பாடசாலை கொடி என்பன ஏற்றிவைக்கப்பட்டு நிகழ்வு ஆம்பமானது.

இந்த போட்டியில் ஒன்பது மாகாணங்களை சேர்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் பங்குபற்றினர்.

மாகாண உடற்கல்வி உதவிப்பணிப்பாளர் இ.இராஜசீலன் அவர்கள் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாண கல்விப்பணிப்பாளர் உதயகுமார் அவர்களும் வடக்கு மாகாண மேலதிக கல்விப் பரிப்பாளர் ஜோன் குயின்ரன்ஸ் அவர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கல்வியமைச்சில் இருந்து வருகை தந்தவர் லலித் பந்துல குணவர்தன, கரம் பயிற்றுவிப்பாளர்கள், போட்டியாளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், மற்றும் பார்வையாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

No comments