போதைப்பொருள் விழிப்புணர்வு செயற்றிட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ். பல்கலைக் கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால், தேசிய ரீதியிலான மாணவர் வழிகாட்டல் போதைப்பொருள் விழிப்புணர்வு

செயற்றிட்டமானது, இன்றையதினம் யாழ். அராலி சரஸ்வதி மஹா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த செயற்திட்டத்தின் நோக்கம் தொடர்பாக குறித்த ஒன்றியத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

மாணவர்களை சரியான வழிப்படுத்தல் மூலம் அவர்களது இலக்குகள் மற்றும் நோக்குகளை அடைந்துகொள்ளவும், அவர்கள் போதைப்பொருள் பாவனையுள்ளவர்களாக திகழாமல் நல்லதொரு பாதையில் செல்ல வழிகாட்டுதலுமே இந்த செயற்றிட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இன்றையதினம் குறித்த பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்றிட்டம் தொடர்ந்து இலங்கை முழுவதும் செயற்படுத்தப்படவுள்ளது. பாடசாலை மாணவர்களை இலக்குவைத்தே எமது இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது - என்றனர். (க)

No comments