டுவிட்டரை வாங்கினார் எலன் மஸ்க்: மூத்த நிர்வாகிகள் அதிரடியாக நீக்கம்!!


டுவிட்டர் நிறுவனத்தை தொழிலதிபர் எலன் மஸ்க் இன்று தன் வசப்படுத்தியன் மூலம் அதன் உரிமையாளரானார்.

டுவிட்டர் பங்குகளை 44 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கும் ஒப்பந்தை முடித்துக்கொண்ட எலன் மஸ்க் நேற்று வியாழக்கிழமை உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க சமூக ஊடக தளங்களில் ஒன்றில் தனது முத்திரையை வைக்கும் நோக்கத்தின் சமிக்ஞையாக டுவிட்டரின் மூன்று மூத்த நிர்வாகிகளை மஸ்க் அதிரடியாக நீக்கினார்.

தலைமை நிர்வாகி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல் மற்றும் சட்டம், கொள்கை மற்றும் அறக்கட்டளையின் தலைவர் விஜயா காடே ஆகியோரே பதவிகளிலிருந்து நீக்கப்பட்டவர்களாவார்.

இந்த நிலையில், முதல் டுவிட் ஆக பறவை சுதந்திரம் பெற்றது என்று பதிவிட்டுள்ளார்.

டுவிட்டரை ஆரோக்கியமான விவாதத்திற்கான களமாக்கப்போவதாகவும் பணம் சம்பாதிக்க அதனை தாம் வாங்கவில்லை என்றும் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் யாரும் எந்த விளைவுகளையும் சந்திக்காமல் எதை வேண்டுமானாலும் சொல்லி விட முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

No comments