பேரம் படிந்தது:ரஸ்ய விமானங்கள் மீண்டும் இலங்கைக்கு!
இலங்கைக்கான ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் வாரத்தில் இரண்டு விமான சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விமான சேவைகள் இடம்பெறவுள்ளன.
, ஏரோஃப்ளோட் விமான சேவைக்கு மேலதிகமாக ரஷ்யாவின் அசூர் எயார் விமான சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விமானம் வாரத்தில் நான்கு தடவைகள் இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து இந்த விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த விமான சேவைகள், இலங்கைக்கான ரஷ்ய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்
Post a Comment