எங்கப்பன் குதிருக்குள் ஒன்றுமில்லை!



ராஜபக்ச தரப்பினது பினாமியாக மோடிகளில் ஈடுபட்ட பெண் தொடர்பில் மேலும் தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளது.

எனினும் தமக்கும் குறித்த பெணடணிற்குமிடையில் தொடர்புகள் இல்லையென மகிந்த அறிவித்துள்ளார். 

உலக வர்த்தக மையத்தில் பெண் ஒருவர் நடத்தும் நிதி நிறுவனத்தில் பலம் வாய்ந்த அரசியல்வாதிகளும் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக அதன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிதி நிறுவனத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் 15 கோடியும், முன்னாள் ஆளுநர் ஒருவர் 10 கோடியும் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் முன்னாள் ஆளுநரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதுடன், முன்னாள் அமைச்சரிடம் இருந்து இதுவரை முறைப்பாடு எதுவும் வரவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை, சந்தேகநபருக்கு சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான சொகுசு காரை, நாட்டிலுள்ள பிரபல பிக்கு ஒருவர் முதலீட்டிற்காக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பல கோடி ரூபாய் முதலீடு செய்தும் பலன் தராத நிலையில், அந்த பெண்ணிடம் பணம் கேட்டபோது, ​​பிரபல நடிகை ஒருவர் அந்த நபர்களுடன் செல்போனில் ஆபாசமாக பேசியதை பதிவு செய்து, பணம் கேட்டவர்களை மிரட்டியதாக பொலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நடிகை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

No comments