பலாலி விமானம்:பறக்குமா? இலலையா?யாழ்ப்பாணம், பலாலி விமான நிலையத்தில் இம்மாத இறுதியில் இருந்து விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கையின் சிவில் விமான சேவைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாண விமான நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும், இந்தியாவின் நிதி உதவியின் கீழ் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்;.

கடந்த மூன்று வருடங்களிற்கு மேலாக திறக்கப்படுவதாக தொடர்ச்சியாக செய்திகள்  வெளியிடப்பட்டு வந்த போதும் விமான நிலையம் திறக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலைய தரத்திற்கு கொண்டு வந்தோம். அதற்கு தேவையான சான்றுகளை விமான சேவைகள் அதிகார சபையின் ஊடாக பெற்றுக்கொண்டோம். பின்னர் இந்தியாவின் விமான சேவைகள் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்தோம். முன்னர் இந்திய விமான சேவை நிலையங்கள் இணங்கியிருந்த போதும், விமான நிலையத்தை திறந்த பின்னர் விமானங்கள் வரவில்லையென அமைச்சர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.


No comments