தேய்ந்த ரயருடன் ஓடிய ஆம்புலன்ஸ் - ரயர் வெடித்ததில் நோயாளிகள் வீதியில்



மோசமான நிலையில் காணப்பட்ட ரயருடன் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் இருந்து நோயாளி ஒருவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் கொண்டுசென்ற ஆம்புலன்ஸ் வண்டியின் ரயர் வெடித்து வீதியில் நின்றதைச் செய்தி சேகரிக்க முயன்ற  ஊடகவியலாளரை அம்புலன்ஸ் வண்டியின் சாரதியும் அதற்குப் பொறுப்பாகச் சென்ற வைத்தியரும் தகாத வார்த்தைகளால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

வேலணை மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்திற்கு சற்று தொலைவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

சாரதியின் சரியான பராமரிப்பின்மையால் மிக மோசமான நிலையில் காணப்பட்ட ரயருடன் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் இருந்து நோயாளி ஒருவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு  காலை ஆம்புலன்ஸ் வண்டி ஒன்று சென்றுள்ளது.

இந்நிலையில் குறித்த ஆம்புலன்ஸ் வண்டியின் ரயர் மண்கும்பான் பிள்ளையார் கோயிலை தாண்டி சிறுது தூரம் சென்றிருந்த நிலையில் வெடித்துள்ளது.

இதனால் குறித்த வண்டியில் இருந்த நோயாளி சிலமணிநேரம் வீதியில் பரிதவித்த நிலை காணப்பட்டது.

இந்த நிலையில் குறித்த சம்பவத்தை செய்தியாக சேகரித்து ஒளிப்பதிவு செய்த ஊடகவியளாளர்

கடுமையாக திட்டிய சாரதியும் வைத்தியரும் கீழ்த்தரமான சைகையையும் காணவில்லை ஊடகவியளாளருக்கு அச்சுறுத்தல்

விடுத்ததுடன் அவரை தாக்கவும் முற்பட்டனர்.

இதேநேரம் சாரதி குறித்த ஆம்புலன்ஸ் வண்டியின் பராமரிப்பை சரியாக மேற்கொள்ளாதுள்ளதுள்ளமையும் 24 மணி நேரமும் சேவை செய்யவேண்டிய அம்புலன்ஸ் வண்டியின் சக்கரங்களின் ரயரை சரியாக பராமரித்து அதற்கான மாற்றங்களைச் செய்யாமையே இந்த சம்பவத்துக்குக் காரணமான அச்சம்பவத்தை மறைக்கவே செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை தாக்கியுள்ளார்.

இதேநேரம் குறித்த சம்பவம் தொடர்பில் துறைசார் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(க)


.

No comments