அனைவரும் விடுவிக்கப்படவேண்டும்!

 


தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் அரசியல் தீர்மானமொன்றின் கீழ் விடுவிக்கப்படவேண்டும்.இடையிடையே சிலரை விடுவிப்பதும் பின்னர் வருடக்கணக்கில் கண்டுகொள்ளப்படாதிருப்பதும் கவலைக்குரியதென அரசியல் கைதிகளது விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 45 அரசியல் கைதிகளது விடுதலையை வலியுறுத்தி வருகின்ற நிலையில் எண்மரது விடுதலை நம்பிக்கையினை தருகின்ற போதும் ஒட்டு மொத்த அரசியல் கைதிகளதும் விடுதலையே முழுமை பெற்றதாகவும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையெ தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினரை தீபாவளி தினத்தன்று விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கட்டம்  கட்டமாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றதெனவும் தெரிவித்துள்ளார்.

No comments