காலக்கொடுமை:கோத்தாவிற்கு விகாரை!முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பரம்பரைக்கு நன்றி செலுத்துமுகமாக விகாரை கட்டியுள்ளார் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர்.கோத்தாவின் சந்ததியினருக்கு நன்றி செலுத்தும் முகமாக அலஹெர – மினிபுரகம கிராமத்தில் வசிக்கும் அவர் பத்து இலட்சம் ரூபா செலவில் விகாரை ஒன்றை நிர்மாணித்து வழிபாடு செய்துள்ளார்.

அலஹெர – மினாபுர கிராமத்தைச் சேர்ந்த று.பு.சந்திர சேன பண்டா (45) முன்பள்ளி ஒன்றிற்கு அருகாமையில் இந்த விகாரையை நிர்மாணித்து அங்குள்ள சிறுவர்களுக்கு வழங்கியுள்ளார்.

கூலி வேலை செய்து சம்பாதித்த பணத்தில் இந்த விகாரையை அவர் கட்டியுள்ளார்.

பிரதேசத்தில் பல பொது இடங்களில் ஐந்து விகாரைகளை  நிர்மாணித்துள்ள இவர், படைப்பிரிவின் கீழ் சேவையாற்றிய இராணுவ சிப்பாய் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments