கடற்கரையை தாரை வார்க்கமுடியாது!வடக்கிலுள்ள  கடற்கரைகள் வடக்கை சேர்ந்த மீனவர்களிற்கே கடலட்டை வளர்ப்பிற்கு வழங்கவேண்டும்.வெளியாருக்கு எமது கடற்கரைகளை தாரைவார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென பூநகரி கிராஞ்சி கடற்தொழிலாளர்  கூட்டுறவுசங்கம் அறிவித்துள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் ககருத்து வெளியிட்ட மீனவ பிரதிநிதிகள் பூநகரியில் கிராஞ்சி பகுதியில் உள்ளுர் மீனவர்களிற்கே கடற்கரைகள் கடலட்டை வளர்ப்பிற்கென வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதனிடையே தீவகத்தின் பெரும்பகுதி கடற்கரை மீனவர்களல்லாத வெளியாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவவ்களை பற்றி அறிந்திருக்கவில்லையென தெரிவித்த மீனவ பிரதிநிதிகள் வடக்கிலுள்ள  கடற்கரைகளை  வெளியாருக்கு தாரைவார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் தெரிவித்தனர்.

No comments