சதொச புதைகுழி அகழ்வு மீண்டும்!மன்னார் ‘சதொச’ மனித புதைகுழி தொடர்பான வழக்கு, மீண்டும் விசாரணைக்கு  அழைக்கப்படும் போது, அன்றையதினம், ‘சதொச’ மனித புதைகுழி அகழ்வு பணிக்கான திகதி அறிவிக்கப்படும் என, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார்.

இன்று, மன்னார் ‘சதொச’ மனித புதைகுழி தொடர்பான வழக்கு, மீண்டும், மன்னார் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஏற்கனவே சட்ட வைத்;தியர் ராஜபக்ஸ அவர்களுக்கு மன்றினால் அழைப்பானை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில்,அவர் இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் தோன்றியிருந்தார்.

தனது அறிக்கையினை இவ்வாண்டின் மே மாதம் 18 ஆம் திகதி (அனுப்பி வைத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.


-நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட அறிக்கைக்கு அமைவாக மன்னார் ‘சதொச’ மனித புதைகுழியை மீண்டும் அகழ்வு செய்வதற்கு என்ன என்ன விடையங்கள் தேவை.அழைக்கப்பட வேண்டிய திணைக்களங்கள் மற்றும் செலவு தொகை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து மன்னார் சதோச மனித புதைகுழி யின் அகழ்வு பணி எப்போது ஆரம்பிப்பது என்பது தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் அடுத்த தவணையில் தெரிவிக்கும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பாக ஆஜரான சட்டத்தரணி காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தில் ஏற்கனவே மேற்கொண்டது போன்ற அகழ்வு பணி மேற்கொள்ளுவதற்கு நிதி உதவியை மேற்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அடுத்த தவணை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி (30-11-2022) மன்னார் ‘சதொச’ மனித புதைகுழி அகழ்வு பணி எப்போது ஆரம்பிப்பது என்பது குறித்து தெளிவாக கூறப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments