தமிழக மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் தாக்குதல்!கடந்த 12ஆம் திகதி தமிழக கடற்பகுதியில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியதாக இந்தியா டுடே இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான தமிழக மீனவர்கள், இலங்கை சிங்கள மீனவர்கள்தான் தாக்குதலை நடத்தினார்கள் என்று குற்றம் சாட்டுவதாக இந்தியா டுடே இணையதளம் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான இலங்கை மீனவர்கள் தங்களுடைய மீன்பிடி சாதனங்கள் மற்றும் மீன்பிடி கப்பலை சேதப்படுத்தியதாகவும், தாங்கள் பிடித்த மீன்களை எடுத்துச் சென்றதாகவும் தமிழக மீனவர்கள் கூறியதாகவும் தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், கடலோர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் இந்தியா டுடே இணையதளம் தெரிவித்துள்ளது.

வடக்கு கடற்பரப்பில் நாள் கணக்கில் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடும் சிங்கள மீனவர்களே தாக்குதல்களினை முன்னெடுத்துள்ளமை அம்பலமாகியுள்ளது.


No comments