மீள எழும்பும் ராஜபக்சாக்கள்?ராஜபக்ச தரப்பு மீள தமது அரசியலை கட்டியெழுப்ப முற்பட்டுள்ள நிலையில் மக்கள் எதிர்ப்பு பரவலாக வெளியிடப்பட்டுவருகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) இன்று நாவலப்பிட்டியில் நடத்திய கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நாவலப்பிட்டி ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) அமைப்பாளர் சசங்க சம்பத் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள “ஒன்றாக எழுவோம்” என்ற தொடரின் இரண்டாவது பொதுக்கூட்டம் இன்று நாவலப்பிட்டியில் இடம்பெற்றதுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வருகையால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஒருங்கிணைப்பின் கீழ் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாவலப்பிட்டி நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments