பிரான்சில் நடந்த பாரிய போராட்டம்!! 140,000 பேர் பங்கேற்பு!!

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கண்டித்து பிரான்ஸ் நாட்டில் அதனை தலைநகரில் பொதுமக்களால் போராட்டம் நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறையை ஏற்படுத்திய சுத்திகரிப்பு ஆலை வேலைநிறுத்தத்தில் மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை பாரிஸில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய போராட்டத்தில் 140,000 பேர் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

சுமார் 30,000 பேர் கலந்துகொள்வார்கள் என்று பொலிசார் கணித்திருந்தனர். ஆனால் அதை நான்கு மடங்குக்கு அதிகமான மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இடதுசாரி அரசியல் தரப்பினரால் அழைப்பு விடுக்கப்பட்டது. பிரான்ஸ் அன்போட் (LFI) கட்சியின் தலைவரான Jean-Luc Melenchon தலைமையில் நடைபெற்றது.

பல பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் நாளை மறுதினம் செவ்வாயன்று ஒரு தேசிய வேலைநிறுத்த தினத்தை அறிவித்துள்ளன. இது சாலை போக்குவரத்து, தொடருந்துகள் மற்றும் பொதுத்துறையை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


No comments