வடக்கிற்கும் ஒன்று வேண்டும்!



 வடக்கில் போதைப் பொருள் பாவனை கட்டுக்கடங்காது செல்கின்ற நிலையில் போதைக்கு அடிமையாகின்றவர்களை நல்வழிப்படுத்தவதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கில் போதைப் பொருள் பாவனை அச்சுறுத்தும் வகையில், அதிகரித்து வருவதாக அண்மைய தகவல்கள் வெளிப்படுத்தி வருகின்றமை தொடர்பாக தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும். அது தொடர்பான அவசியமான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாகவும் அவசரமாக சிந்திக்க வேண்டுமென அரசியல் தரப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

மேலும், வடக்கில் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களை நல்வழிப்படுத்தவதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட வேண்டும்.

அத்துடன் போதைப் பொருள் பாவனை குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகின்ற சந்தேகநபர்களை, சிறைச் சாலைகளுக்கு அனுப்பாமல், புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை நீதவான் நீதிமன்றிற்கு வழங்க வேண்டும்  என கோரப்பட்டுள்ளது.


No comments