இத்தாலி கத்திக்குத்து! ஒருவர் பலி! ஆசனல் கால்பந்து வீரர் உட்பட நால்வர் காயம்!!


வடக்கு இத்தாலியின் மிலன் அசாகோவில்  உள்ள கார்ஃபூர் (Carrefour) என்று அழைக்கப்படும் பல்பொருள் அங்காடியில் கத்தியால் குத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துடன் மேலும் ஆர்செனல் கால்பந்து வீரர் பாப்லோ மாரி உட்பட நால்வர் காயமடைந்தனர்.

இந்நிலையில் 46 வயதான தாக்குதல் நடத்திய அந்த இத்தாலிய நபர், உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தாக்குதலுக்குப் பிறகு உடனடியாக கைது செய்யப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ஸ்பெயின் கால்பந்து வீரர் பாப்லோ உள்பட 4 நபர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.No comments