தீக்கிரையான கடிதங்கள்!இலங்கையில் போர்க்காலத்தில் காணால் ஆக்கப்பட்ட தமிழர்கள் வெளிநாடுகளில் வசிப்பதான பரப்புரைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில நல்லாட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோருக்கான பணியகமும் தற்போதைய ஆட்சியாளர்களது பரப்புரைக்கு  துணைபோயுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களில் ஐம்பது பேருக்கு மேல் வெளிநாடுகளில் வசிப்பதாக பணியகத்தின் தலைவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தால் அனுப்பப்பட்ட கடிதங்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

போராட்ட களத்தின் முன்றலில் வைத்தே இன்று வியாழக்கிழமை கடிதங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறகளுக்கு, அரசாங்கத்தின் காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகத்தால், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான மேலதிக விபரங்கள் கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த அலுவலகத்தை தாம் நிராகரிப்பதாக தெரிவித்ததுடன் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடருமென தெரிவித்து கடிதத்தை தீக்கிரையாக்கியுள்ளனர்.


No comments