இலங்கையின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை!
இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள 36 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்னவின் பணிப்புரையின் பேரில், மேற்கு கடற்படை கட்டளை பிரிவு இரண்டு நிவாரண மற்றும் மீட்புக் குழுக்களை இரத்தினபுரிக்கும் நான்கு குழுக்களை களுத்துறைக்கும் அனுப்பியுள்ளது.

மேற்கு கடற்படைக் கட்டளையில் மேலும் 21 நிவாரண மற்றும் மீட்புக் குழுக்களும், தெற்கு கடற்படைக் கட்டளையில் இதேபோன்ற ஒன்பது குழுக்களும் தேவை ஏற்பட்டால் அனுப்புவதற்கு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

No comments