ஜெனீவாவில் சிங்களவர்களும் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம்!


ஜெனீவாவில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று  நடந்தது. இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சிறீலங்காவில் நடைமுறையில் உள்ள  அரசாங்க பயங்கரவாதச் சட்டம் மூலம் மக்கள் மீது முன்னெடுக்கும் அடக்குமுறையை முடிவுக்கு கொண்டு வருமாறு வலியுறுத்தியே இப்போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் மூலம் போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருமாறும், கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக் காரர்களை விடுவிக்குமாறு  கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதுவரைகாலமும் சிறீலங்கா அரசாங்கத்திறகு எதிரான போராட்டங்களை தமிழ் மக்கள் முன்னெடுத்திருந்த நிலையில், தற்போது சிங்கள மக்களும் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை ஜெனீவாவில் ஆரம்பித்துள்ளனர்.
No comments