அமெரிக்க தூதரக நிதி உதவி போராட்டங்கள் மும்முரம்!


கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக நிதி ஒதுக்கிட்டில் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டங்கள் தற்போதும் வடகிழக்கில்  தொடர்கின்றன.

‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ போராட்டத்தின், 42 ஆம் நாள் கவனயீர்ப்பு போராட்டம், யாழ்ப்பாணம் மயிலிட்டியில் இடம்பெற்றது.

‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப்பொருளில், வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில், 100 நாட்கள் நடைபெறும் செயல் திட்டத்தின், 42 ஆம் நாள் கவனயீர்ப்பு போராட்டம், வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில், இன்று காலை 10.30 மணியளவில், மயிலிட்டி கடற்கரை துறைமுகம் அருகில் இடம்பெற்றது.

இதில், கிராம மட்ட அமைப்புகள், விவசாய, மீனவ சங்கங்கள், பெண்கள் அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழு பணியாளர்கள் பங்கேற்றனர்.

திட்டத்தில் பங்கேற்ற மக்களால், 100 நாள் செயற் திட்டத்திற்கான பொது மகஜர் வாசிக்கப்பட்டதுடன், வருகை தந்த மக்களுக்கு, அரசியல் தீர்வு திட்டம் மற்றும் 13 ஆம் திருத்த சட்டம் தொடர்பான, சாதக பாதக விளைவுகள் தொடர்பாக, சட்டத்தரணி சிவஸ்கந்தசிறி தெளிவுபடுத்தினார்.

அத்துடன், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ கருத்துக்களை வழங்கினார்.

இதன் போது, அரசியல் தீர்வு விடயத்தில், மக்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான கருத்துக்களும் உள்வாங்கப்பட்டது

No comments